பிகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் பெட்டிகளின் இணைப்பு இரண்டு துண்டாகப் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேற்று (செப்டம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பிகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அதன் பெட்டிகளின் இணைப்பு திடீரென உடைந்து இரண்டாக பிரிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
VIDEO | Magadh Express decoupled on Buxar-DDU-Patna rail section.
(Source: Third Party)#Trainderailment pic.twitter.com/assF7s4lYJ
— Press Trust of India (@PTI_News) September 8, 2024
இதுகுறித்து பேசியுள்ள கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்ஸ்வதி சந்திரா, புதுடெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்தது. ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் இடையே கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எஞ்சினிலிருந்து 13-வது பெட்டி எண் S-7 மற்றும் என்ஜினில் இருந்து 14-வது பெட்டி எண் S-6 ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு உடைந்து பிரிந்தது.
மீட்புக் குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அதைச் சரி செய்தனர். இதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரை!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் கொத்துக்கறி
டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!
அரைச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா – அப்டேட் குமாரு