Madras choppers joined the mission

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இணைந்த மெட்ராஸ் சாப்பர்ஸ்!

இந்தியா

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவிக்கும் 41  தொழிலாளர்களை மீட்கும் பணிகள்  இன்று 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தற்போது இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவான மெட்ராஸ் சாப்பர்ஸ் என்ற பொறியாளர் குழுவும் ஈடுபட உள்ளது.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு முந்தைய மெட்ராஸ் பிரசிடென்சி ராணுவத்திலிருந்தது மெட்ராஸ் சாப்பர்ஸ். இந்தப் படைப்பிரிவின் தலைமையகம் தற்போது பெங்களூரில் உள்ளது . சுறுசுறுப்பான போரில் அவர்களின் முக்கிய வேலை, எதிரிகளின் கோட்டைகளுக்குள் பீரங்கிகளை கொண்டு வர அனுமதிக்கும் ‘சாப்ஸ்’ அல்லது ‘அகழி’களைத் தோண்டுவது மற்றும் கோட்டைச் சுவர்களில் உடைப்பை உருவாக்கும் ‘சுரங்கங்களை’ தோண்டுவதாகும்.

தற்போதைய நிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ஆறு திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒவ்வொரு திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு  வளர்ச்சி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது தெரிவித்துள்ளார். மேலும் சிக்கியுள்ளவர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி சுரங்கத்துக்குள் இருப்பவர்களை மீட்க செங்குத்தாக துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 15 மீட்டர்கள் வரை துளையிடப்பட்டுள்ளன. இன்னும்  71 மீட்டர்கள் துளையிட்டால், சிக்கியுள்ளவர்களை மீட்டுவிட முடியும்.  இதுதவிர கிடைமட்டமாக துளையிடும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் 170 மீட்டர்கள் வரை செங்குத்தாக  துளையிடப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சாப்பர்ஸ் என்ற பொறியாளர் குழுவும்  சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *