Madhya Pradesh: Voting machines burnt in fire! - Collector description

தீயில் எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்: எங்கே, ஏன்?

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றி சென்ற பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

இந்தியாவில் மூன்றாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (மே 7) 93 தொகுதிகளில் நடைபெற்றது. மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

மத்தியப் பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் ஏற்கனவே நடைபெற இருந்த பெதுல் தொகுதி உட்பட 9 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்றைய தினம் தான் நடைபெற்றது.

இதில், மத்தியப் பிரதேசத்தில் நேற்று 66.05% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெதுல் தொகுதியில் 72.65% வாக்குப்பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதிக்குட்பட்ட கோவுலா கிராமத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் வாக்குச்சேகரிக்கும் இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு பேருந்து மூலம் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பேருந்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 36 தேர்தல் பணியாளர்களும் பயணித்துள்ளனர். அப்போது, திடீரென பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பேருந்தில் இருந்த பணியாளர்கள் தப்பித்து சென்றுள்ளனர். ஆனால், பேருந்தின் உள்ளே இருந்த 6 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 4 தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

இதுத் தொடர்பாக, அம்மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “பேருந்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்தில் 275, 276, 277, 278, 279 மற்றும் 280 ஆகிய 6 வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன.

தீயணைப்புப் படையினர் மூலம் தீ அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் பேருந்தில் முழுமையாக தீ பரவியதால், பேருந்து முழுவதும் சேதமடைந்தது. பேருந்தில் இருந்த 6 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன.

இதுத்தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆணையத்திடம் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்பானி, அதானியை பற்றி ஏன் பேசுவதில்லை… என்ன டீலிங் நடந்தது? : ராகுலுக்கு மோடி கேள்வி!

வெறுப்பு பேச்சு: மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் மனு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *