மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

அரசியல் இந்தியா

தேசிய மக்கள்‌ தொகை கணக்கெடுப்புடன்‌ சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்‌ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதில் “இந்தியாவில்‌ சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின்‌ பலன்களை மிகவும்‌ பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக்‌ கொண்டு செல்வதற்கும்‌, வலிமையான, அனைவரையும்‌ உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும்‌ ஏதுவாக, தேசிய மக்கள்‌ தொகை கணக்கெடுப்புடன்‌, விரிவானதொரு சாதிவாரிக்‌ கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத்‌ தொடங்கிட வேண்டும்.

2021 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில்‌, வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள்‌ தொகை கணக்கெடுப்பில்‌, சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்.

மாநில அளவில்‌ இதற்கான நல்ல முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும்‌, இந்தியாவின்‌ சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன்‌ மேற்கொள்ளப்பட்டால்‌ மட்டுமே, சமூக நீதி, சமத்துவம்‌ போன்றவற்றை நிலைநாட்டிட இயலும்‌. சமமான மற்றும்‌ உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்‌” என்று தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமிக்கு திரும்பியது ககன்யான் சோதனைக் கலன்!

ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தொடர்ந்து விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *