ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூ.4.50 குறைத்துள்ளது மத்திய அரசு.
இதனால் ரூ.1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் இன்று முதல் ரூபாய் 1,924.50 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த மாதம் 22ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூ. 39.50 குறைப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் 4 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீப காலமாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் சிலிண்டர் விலை பொதுமக்களிடையே கவனம் பெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
படையெடுப்புக்குப் பின்னர் உக்ரைன் மீது மிக மோசமான தாக்குதல் தொடுத்த ரஷ்யா!
திருப்பதி: நாளை முதல் டோக்கன்கள் இல்லாத பக்தர்களுக்கும் அனுமதி!