எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் மோடி பேச உள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை துவங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்.பி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
“மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்” – காங்கிரஸ்