45 நாள் பிரதமர்: ஆண்டுக்கு 1 கோடி அலவன்ஸ்?: கடுப்பில் பிரிட்டன் மக்கள்!

இந்தியா

இங்கிலாந்து பிரதமராக 45 நாள் மட்டுமே பதவி வகித்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி அலவன்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே கடந்த மாதம் 6ம் தேதி இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். அப்போது நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மாற்றுவேன் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் சமீபத்தில் அவர் தலைமையிலான அரசு கொண்டு வந்த வரி குறைப்பு திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் கடுமையாக பாதித்தன. டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

இதற்கு பொறுப்பேற்று கடந்த 20ம் தேதி பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லிஸ்ட்ரஸ், இங்கிலாந்தின் வரலாற்றிலேயே மிக குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

ஆண்டுக்கு 1.5 லட்சம் பவுண்டு!

இந்நிலையில் நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர் என்ற முறையில் லிஸ் டிரஸ், தனது வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 1,15,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1.05 கோடி) அலவன்ஸாக பெறும் உரிமையை பெற்றுள்ளார்.

குறுகிய காலமே இருந்த போதிலும் பப்ளிக் டியூட்டி காஸ்ட்ஸ் அலவன்ஸ் (பிடிசிஏ) எனப்படும் பொது கடமை செலவு நிதியுதவி பெற உள்ளார். இதனை அவர் ஏற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகையைப் பெறும் 6வது முன்னாள் இங்கிலாந்து பிரதமர் என்ற பெயர் லிஸ் டிரஸ்க்கு ஏற்படும்.

Liz Truss is eligible for allowance of 1crore per year

அலவன்ஸ் பெறும் முன்னாள் பிரதமர்கள்!

1979 -1990ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ராஜினாமா செய்ததை அடுத்து,

இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர்கள் தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபட உதவியாக அலவன்ஸ் திட்டம் 1991ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

இதற்கான நிதி மக்களின் வரி பணத்திலிருந்து ஆண்டுக்கு 8 லட்சம் பவுண்ட்டுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.30 கோடி) அதிகமான தொகை செலவிடப்படுகிறது.

இதுவரை பிரிட்டனின் அமைச்சரவை அலுவலகத்தால் வெளியிடப்பட்ட மிக சமீபத்திய நிதி அறிக்கையின்படி, இரண்டு முன்னாள் பிரதமர்களான ஜான் மேஜர் மற்றும் டோனி பிளேயர் ஆகியோர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 1,15,000 பவுண்டுகளை தொடர்ந்து பெறுகின்றனர்.

Liz Truss is eligible for allowance of 1crore per year

மேலும், கோர்டன் ப்ரவுன் 1,14,712 பவுண்டையும் (ரூ.1,05,63,428), டேவிட் கேமரூன் 1,13,423 பவுண்டையும் (ரூ.1,04,44,729), தெரஸா மே 57,832 பவுண்டையும் (ரூ.53,25,547) அலவன்ஸாக பெற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனும் இந்த அலவன்ஸூக்கு தகுதியுள்ள நிலையில், அவர் ஜூலை மாதம் ராஜினாமா செய்ததில் இருந்து அவர் பெற்ற தொகை இதுவரை பகிரப்படவில்லை.

சர்ச்சையில் லிஸ் டிரஸ்!

எனினும் 45 நாள் மட்டுமே அதிகாரத்தில் இருந்த லிஸ் டிரஸ் அதே அலவன்ஸ் பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Liz Truss is eligible for allowance of 1crore per year

நாட்டின் எதிர்கட்சியான லிபரல் டெமாக்ரக்டிக் கட்சி செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஜார்டின், “இங்கிலாந்து முன்னாள் பிரதமர்களை போல், ஒரு வருடத்திற்கு அதே 1,15,000 பவுண்டுகளை வாழ்நாள் நிதி பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்திவிட்டு பதவி விலகியவருக்கு இவ்வளவு தொகை கொடுப்பது நியாயம்தானா? என்று அந்நாட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

56 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம்: நடிகர் பப்லு சொல்லும் விளக்கம்!

வீர சிம்ஹா ரெட்டி: மீண்டும் ஆக்‌ஷனில் பாலகிருஷ்ணா

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *