பெண்ணின் கண் இமையில் இருந்த 16 செ.மீ நீள புழு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 20 வயது இளம் பெண் ஒருவர் கண்ணில் தீவிர உறுத்தல் இருப்பதாக கூறி சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு பல வித சிகிச்சை கொடுத்தும் உறுத்தல் நின்றபாடில்லை. இதையடுத்து, டாக்டர் அனுப் ரவி என்பவர் தீவிரமாக அந்த பெண்ணின் கண் பகுதியை சோதனை செய்தார். அப்போது, கண்ணின் இமை பகுதியில் கோடு போன்று காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதுதான் பிரச்னையாக இருக்கும் என்று கருதிய டாக்டர், உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அதிர்ச்சிக்கரமான விஷயம் கண்ணில் இருப்பது தெரிய வந்தது. அதாவது, அந்த பெண்ணின் கண்ணின் இமை பகுதியில் உயிருடன் புழு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த புழு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அந்த புழு 16 செ.மீ நீளம் இருந்தது. தற்போது, அது சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொசுக்கடி காரணமாக இந்த புழுக்கள் உடலில் உருவாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள் உடலிலும் இவை உருவாகும். கண்கள், நுரையீரல், மூளை , விதைப்பை போன்ற பகுதிகளில் அரிதாக இந்த புழுக்கள் உருவாகிறது. இந்த புழு உடலில் உருவானால் அதிகப்படியான காய்ச்சல், நுரையீல் மார்புக்கு இடையே நெறி கட்டிக் கொண்டிருத்தல், அதிகப்படியான மார்பு வலி போன்றவை அறிகுறிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!
செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார்? – சீமான் கேள்வி!