2023ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் 10 இடங்களில் இந்தியாவின் இரு பெரு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாம் டாம் (Tom Tom) என்னும் நிறுவனம் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை தரவரிசைப் படுத்தியுள்ளது. அதாவது உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் பயணம் 37 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றனவாம். இதற்கு அடுத்தபடியாக அயர்லாந்தின் டப்லின் நகரம் உள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் பயணிக்க 29 நிமிடங்கள் 30 விநாடிகளாகின்றன. மூன்றாவது இடத்தில் கனடாவின் ரொரன்டோ நகரம் உள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் பயணிக்க 29 நிமிடங்களாகின்றன.
அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இத்தாலியின் மிலன் நகரமும், ஐந்தாவது இடத்தில் பெரு நாட்டின் லிம்பா நகரமும் உள்ளன. ஆறாவது இடத்தில் இந்தியாவின் பெங்களூரு நகரம் உள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் பயணிக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் தேவைப்படுகிறதாம். ஏழாவது இடத்தில் புனே நகரம் உள்ளது. இங்கு 10 கிலோமீட்டர் பயணிக்க 27 நிமிடங்கள் ஆகின்றன. போக்குவரத்து நெரிசல் குறித்த தரவுகளுக்கு 55 நாடுகளின் 387 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?
தளபதிய இயக்குறது யாரு? : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: எடுபடாத அண்ணாமலை வியூகம்… எடப்பாடிக்கு அமித்ஷா விட்ட கடைசி தூது!
நெற்றி நிறைய பட்டையுடன் வழிபாடு : ராகுலா இது?
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை!