Lightning struck 10 dead - 3 injured

மின்னல் தாக்கி 10 பேர் பலி – 3 பேர் காயம்!

இந்தியா

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் சூறாவளி சுழற்சியால் பருவமழை தொடங்கி மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் முறையே 126 மி.மீ மற்றும் 95.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் நான்கு பேரும், போலங்கிரில் இரண்டு பேரும், அங்குல், பவுத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாகவும் குர்தாவில் மூன்று பேர் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்துள்ளனர் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒடிசாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்  

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *