ஐம்பது சதவீதமாக சரிந்த LIC லாபம்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Published On:

| By Manjula

காப்பீட்டு துறை நிறுவனமான எல்ஐசி-யின் லாபம் 50% சரிந்து இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 2023-2024-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 50% குறைந்து 7,925 கோடியாக உள்ளது.

எல்ஐசி நிகர லாபம் மட்டுமல்லாமல் பிரீமியம் மூலம் கிடைக்கும் வருமானமும் கணிசமான அளவு குறைந்துள்ளது.அதாவது எல்ஐசியின் நிகர பிரீமியம் வருவாய் இந்த காலாண்டில் 19% குறைந்து ரூபாய் 1.07 லட்சம் கோடியாக உள்ளது.

இதனால் எல்ஐசியில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில், எல்ஐசியின் நிகர லாபம் ரூ.17,469 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்ஐசி தன்னுடைய காலாண்டு முடிவுகளை வெளியிட்டவுடனேயே பங்கு சந்தையில் எல்ஐசியின் பங்குகள் சரிவடைய ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

லூசிஃபர் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share