வாழ்வும் சாவும் உங்கள் கையில்! லெபனான் மக்களுக்கு நெதன்யாகு அறிவுரை!

இந்தியா

”ஹிஸ்புல்லா அமைப்பை லெபனானில் இருந்து வெளியேற்றுவதுதான் உங்களுக்கு நல்லது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதால் லெபனானை இஸ்ரேலும் தாக்குகிறது. சமீபத்தில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொலை செய்தது. அப்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சாமானிய மக்களை தாக்குவது தங்களது நோக்கமல்ல என்று வீடியோ வழியாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வீடியோ வழியாக  கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், ”ஒரு காலக்கட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் வைரமாக லெபனான் நாடு  ஜொலித்தது. சகிப்புத்தன்மைக்கும் அழகுக்கும் பெயர் போன நாடாக லெபனான் திகழ்ந்தது. லெபனான் மக்களுக்கு இது தெரியுமா? ஈரான் தலையிட்டதன் விளைவு இன்று மாறி விட்டது. அமைதியும் அழகும் கெட்டு போர் நடக்கும் நாடாக மாறி விட்டது.

தீவிரவாதிகள் குடியிருக்கும் நாடாக மாறியுள்ளது. லெபனான் மக்களே! உங்கள் நாட்டை அவர்களிடத்தில் இருந்து மீட்டுக் கொள்ளுங்கள். உங்கள் நாட்டை மீட்டெடுப்பதும் அல்லது அழிவுக்குள் தள்ளுவதும் உங்கள் முன் இருக்கும் இரு வழிகள். எங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இஸ்ரேல் கண்டிப்பாக வெற்றி பெறும். அதை உணர்ந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைப்படை  தாக்குதலை தீவிரப்படுத்தியதை பெஞ்சமின் நெதன்யாகு இத்தகைய வேண்டுகோளை லெபனான் மக்களுக்கு விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 திடீரென வீழ்ந்த தங்கம் விலை… வாங்குவதற்குச் சரியான வாய்ப்பு!

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை!

 

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *