காசாவை தொடர்ந்து லெபனான் எல்லையில் இருந்து தாக்குதல் நடத்தி வரும் ஹெஸ்புல்லா குழு மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
அதன்படி லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் தன் நாட்டு மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழு இடையே தொடர்ந்து 15வது நாளாக தொடரும் போரால் காசாவை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
மேலும், வீடுகளை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான பொதுமக்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின்றி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா குழு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இதனையடுத்து லெபனான் எல்லைக்கு அருகே சுமார் 2.கி.மீ தொலைவில் உள்ள நகரங்களில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு உத்தரவிட்டது.
அதன்படி லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான கிரியாத் ஷ்மோனாவில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து கடந்த 2 நாட்களாக வெளியேறி வருகின்றனர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தெற்கு காசா எல்லைக்கு அருகே இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏற்கெனவே காசாவில் உள்ள மருத்துவமனை, மசூதிகள், சர்ச்சுகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகளின் கண்டனத்திற்கு இஸ்ரேல் உள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டென்மார்க் ஓபன்: மீண்டும் பி.வி.சிந்து அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!
எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்!
SA vs ENG: 8 வருடங்களுக்கு பின்… இங்கிலாந்தின் படுதோல்வியை ரசித்த தென் ஆப்ரிக்கா!
கடந்த ஓராண்டில் பணியின்போது இறந்த போலீசார் எத்தனை பேர்?: அமித் ஷா தகவல்!