L&T Finance Ltd was fined Rs 2.50 crore

விதியை மீறிய எல் & டி:  ரூ.2.5 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

இந்தியா

விதிமுறையை மீறியதாக எல் & டி நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 2.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

மும்பையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான எல் & டி நிதி நிறுவனம், இந்தியாவில் உள்ள பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்று. இது மக்களுக்கு வீட்டுக் கடன்கள், இருசக்கர வாகனக் கடன்கள், பண்ணைக்கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த நிறுவனம் மீது விதிகளை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் படி எல் & டி நிதி நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அபராதம் விதித்தது குறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களுக்கு, அதன் அபாய வரம்பு மற்றும் கடன் விண்ணப்பப் படிவத்தில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிப்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விதி மீறல் குறித்து பல்வேறு விசாரணைகள் செய்தும், நிதி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி அதனிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்களை ஆராய்ந்தும் பார்த்ததில் நிறுவனம் விதிமுறையை மீறியது கண்டறியப்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிடாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?

ஒரு ஒருத்தருக்கும் ஒரு கவலை….: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *