அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் கண்டு வருவதன் காரணமாக ஆசிய பங்கு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை உயர்ந்தன.
இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் 635.78 புள்ளிகள் உயர்ந்து 79,741.66 ஆகவும், நிஃப்டி 184.70 புள்ளிகள் உயர்ந்து 24,328.45 புள்ளிகளிலும் வலுவாக திறந்தன.
காலை முதல் அமர்வில் M&M (3.03%), LTIMindtree (2.57%), Tata Motors (2.53%), Apollo Hospitals (2.42%), Hindalco (2.39%) நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் HDFC LIfe (-1.89%), Titan (-0.10%) நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது.
Vedanta, Ola Electric, SpiceJet, Glenmark Pharma, Madras Fertilisers, Suprajit Engineering, KNR Constructions, Polyplex Corporation, SpiceJet, Hindustan Zinc, Tata Steel, Hinduja Global, Ola Electric, Max India பங்குகள் இன்று (ஆகஸ்ட் 16) வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
Glenmark Pharma நிறுவனம் முதல் காலாண்டில் 340 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியதாகவும். நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதம் அதிகரித்து 3244 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
SpiceJet நிறுவனம் முதல் காலாண்டில் நிகர லாபம் கடந்த ஆண்டு ஈட்டிய 197.6 கோடியை ஒப்பிடுகையில் 19.9% குறைந்து 158.2 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் அரவிந்தோ பார்மா பங்கு 4.74% சரிவை சந்தித்து வருகிறது.
இன்று காலை முதல் அமர்வில் டாடா மோட்டார்ஸ் பங்கு 3% அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
ஏப்ரல் 1,2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலத்தில் HDFC லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சண்டிகர் வணிக வரி அதிகாரி மூலமாக, GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது, சம்பந்தப்பட்ட காலத்திற்கு வரி, வட்டி மற்றும் அபராதம் என வரியாக 56.83 கோடியும் , அதற்கு வட்டியாக 49.80 கோடியும், அபராதமாக 5.68 கோடியும் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் HDFC Life பங்கு NSE இல் 2.05% சரிந்து 672.30 இல் வர்த்தகமாகி வருகிறது.
Sunteck Realty Ltd நிறுவனம் இன்று மாலை 4 மணியளவில் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது.
ABIRAFN,COCHINM,THYROCARE,COMPUSOFT,ELIXIR,TREL,ANUHPHR,COMFINCAP,GLAND, COALINDIA,POWERGRID உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று ஈவுத்தொகையை (டிவிடெண்ட்) அறிவித்து உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
உள்ளாட்சித் தேர்தல்… 2026 சட்டமன்றத் தேர்தல் : அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானம்!
மத்திய அரசுக்கு நன்றியும் கண்டனமும் : திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம்!