இந்தியாவின் விலையுயர்ந்த வீடாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்ட்லியாவைதான் இதுநாள் வரை கருதி கொண்டிருந்தோம். மும்பையிலுள்ள இந்த 27 மாடி வீட்டின் மதிப்பு 15 ஆயிரம் கோடி என்கிறார்கள். ஆனால், இதை விடவும் விலை உயர்ந்த வீடு ஒன்று இந்தியாவில் உள்ளது. அந்த வீடு யாருக்கு சொந்தமானது?
பரோடா சமஸ்தானத்தின் மன்னர் சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் என்பவரால் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் அரண்மனைதான் இந்தியாவிலேயே விலை உயர்ந்த வீடு என்று ஹவுசிங்.காம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டடத்தின் தற்போதைய மதிப்பு 25 ஆயிரம் கோடி ஆகும். 1890 ஆம் ஆண்டு இந்த அரண்மணை கட்டப்பட்டது. பரோடா மன்னர் குடும்பத்தினர் காலம் காலமாக இந்த வீட்டில் வசிக்கின்றனர். இந்த அரண்மணை பக்கிங்ஹாம் அரண்மணையை விட 4 மடங்கு பெரியது ஆகும்.
கெய்க்வாட் வம்சத்தின் பரம்பரை வாரிசு சமர்ஜித்சிங் கெய்வாட், லட்சுமி விலாஸ் அரண்மனையின் தற்போது வசிக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சமர்ஜித்சிங் கெய்க்வாட் இந்த அரண்மனையையும் கெய்க்வாட் குடும்பத்தின் பெரும் சொத்தும் இவருக்கு கிடைத்தது. இந்த அரண்மனையில் மனைவி ரதிகராஜே கெய்வாட் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் சமர்ஜித்சிங் வசிக்கிறார். சமர்ஜித் சிங் கெய்வாட் கிரிக்கெட் வீரரும் கூட. பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
சமர்ஜித் சிங்கின் மனைவி மகாராணி ரதிகராஜே, இந்த அரண்மனையை பற்றி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெகனா கோம்ஸ் ஒரு முறை பரோடா வந்த போது, பிரதமர் மோடியுடன் இந்த அரண்மனையில்தான் சந்திப்பு நடந்தது. அப்போது, பரோடா மன்னர் சார்பில் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்