டீசல் இல்லாமல் நின்ற ஆம்புலன்ஸ்: சாலையோரத்தில் நடந்த பிரசவம்!

இந்தியா

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு சென்று கொண்டிருந்த போது 108 ஆம்புலன்ஸில் டீசல் தீர்ந்ததால் நள்ளிரவில் நடுவழியிலேயே குழந்தையை பிரசவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தின் ஷாநகர் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பழங்குடியின பெண்ணை பிரசவத்திற்காக, அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல நேற்று (அக்டோபர் 29) நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது.

பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த ரேஷ்மாவை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஷாநகர் பகுதி பனௌலி என்ற இடத்தில் திடீரென்று டீசல் தீர்ந்து நின்றது.

அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் டீசல் தீர்ந்துவிட்டது என்று ரேஷ்மா குடும்பத்தினரிடம் சொல்ல, இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அந்த வழியில் வேறு எந்த வாகனமும் வரவில்லை.

ரேஷ்மாவிற்கு பிரசவ வலி அதிகரித்ததால் வேறு வழியில்லாமல் உடன் வந்த பெண்கள் அவரை ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கி சாலையோரம் உள்ள மண் தரையில் பிரசவம் பார்த்துள்ளனர்.

அவர்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்ணிற்குக் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவ அவசரத்திற்கு மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையைத்தான் நம்பி இருக்கின்றனர்.

அப்படியிருக்கும் நிலையில், பிரசவத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் டீசல் தீர்ந்து போன சம்பவம் மருத்துவத் துறையின் மீது நம்பிக்கையை குறைத்துள்ளது.

மோனிஷா

தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்

ஓபிஎஸ் ஆதரவாளர் கார் விபத்து: போலீஸ் காயம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.