பச்சை கோழி ரத்தத்தை குடித்த கான் ‘வாய்’ சான்: இந்தியாவில் தண்டனை என்ன?

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் , பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான கான் வாய் சான் மக்கள் முன்னிலையில் மேடையில் கோழி ஒன்றை கொன்று அதன் ரத்தத்தை குடித்தார். இடா நகரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.   தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி ரத்தத்தை குடிப்பது தவறு. பச்சை ரத்தத்தை குடிப்பது கொடூரமான செயலாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்ல பச்சை ரத்தத்தை குடிப்பது உடலுக்கு பல கேடுகளை விளைவிக்கும். பச்சை ரத்தத்தில் பலவித பாக்டீரியாக்கள் அடங்கியுள்ளன. அதில், சல்மனல்லாவும் ஒன்று. இது உடலில்  டயாரியா பாதிப்பு ஏற்படுத்தும். இது தவிர, தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை வரவும் காரணமாக அமையும். பறவை காய்ச்சலையும் ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால்தான் கோவிட் போன்ற பெரும் தொற்றும் பரவியது என்று கூட சொல்கிறார்கள்.

விஷயம் இப்படி இருக்கையில் பொது இடத்தில் கோழியை கொன்று ரத்தம் குடித்த கான்  வாய் சான் மீது பீட்டா அமைப்பு இடா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. சோசியல் மீடியாவிலும் கடும் கண்டனம் எழுந்தது.

தொடர்ந்து, கான் வாய் சான் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘விலங்குகளை துன்புறுத்தும் நோக்கத்தில் தான் அப்படி செய்யவில்லை. உணர்ச்சிவசப்பட்டு இந்த தவறை செய்து விட்டேன். இனி வரும் காலங்களில் மேடையின் கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 அதிகாலை திரிசூலம் ஆபரேசன் : 61 ரெளடிகளை அள்ளிய ஐபிஎஸ்!

குரூப் 2, 2A கூடுதல் காலி பணியிடங்கள்… மாணவர்கள் மகிழ்ச்சி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share