பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: நாளை நாடு தழுவிய உண்ணாவிரதம்!  

இந்தியா

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக்டோபர் 15) நாடு தழுவிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப்டம்பர் 16-ல் மருத்துவக் குழுவுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதில் மருத்துவர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை.

இதனால் மருத்துவர்கள் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில் நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை (அக்டோபர் 15) தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் இளநிலை மருத்துவக் குழு மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வழிநடத்தப்படும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மருத்துவக் கூட்டமைப்பினர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இளநிலை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் மூன்று மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் ஒத்துழைப்பும் உள்ளது.

மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க முதல்வருக்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைக்கிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்ரேலின் அத்துமீறல்: இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

டாப் 10 நியூஸ் : கனமழை எச்சரிக்கை முதல் பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்

பிரச்சனைகள் பலவிதம் அதில் இது தனி ரகம் – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *