வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட மாதிரியும் இருக்க வேண்டும்… அதேசமயம் அதிக வேலையும் வைக்கக்கூடாது என எதிர்பார்க்கும் பலரின் சாய்ஸ் ‘ரெடி டு குக்’ உணவுகள். பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்துக்கும் இன்று இன்ஸ்டன்ட் மிக்ஸ் கிடைக்கிறது.
சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டாக்கள், இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுப் பொருள்கள், பணியாரம், வடை, பஜ்ஜி மாவுகள் போன்றவற்றின் விற்பனை சூப்பர் மார்கெட்டுகளில் அமோகமாக இருக்கின்றன.
ஆனால், பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மேலும், “பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மாவுப் பொருள்கள், ரெடி டு குக் சப்பாத்தி, பரோட்டாக்கள் எல்லாம் பல நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றைப் பதப்படுத்தியிருப்பார்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, உடல் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, தாகம் குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
பாக்கெட் உணவுகள் அனைத்திலுமே, சோடியம் அதிகமாகச் சேர்த்திருப்பார்கள். உணவு கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள்.
ஒரு நாளைக்கு ஒருவர் 2.300 மில்லி கிராம் அளவுக்குத்தான் உப்பு சேர்க்க வேண்டும் என்பது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் பரிந்துரை.
நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் உப்பு மட்டும் பயன்படுத்தவும் என்பதே, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கும்.
ஆனால் பதப்படுத்தப்பட்ட ரெடி டு குக் சப்பாத்தி ஒன்றில் மட்டுமே, நாங்கள் குறிப்பிடும் அளவைவிட அதிக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். உணவில் உப்பு அதிகமாகச் சேர்ப்பதால், ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ரெடி டு குக் உணவுப் பொருள்கள் எல்லாம் எந்த எண்ணெயில், எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிய மாட்டோம். ஒருவேளை சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை எனில், நீர் வழி நோய் ஏற்படலாம்.
ரெடி டு குக் உணவுகள் எதிலும், நார்ச்சத்து இருக்காது. அதே நேரம், கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். மற்ற ஊட்டச்சத்துகள் மிகக்குறைவாக இருக்கும்.
இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.
தொடர்ச்சியாக ஏற்படும் இப்படியான பாதிப்புகள் சிறுநீரகப் பிரச்னைகள், குடல் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்கு வழி வகுக்கும்.
இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டாக்கள் சமைக்கும்போது உப்பி வர வேண்டும் என்பதற்காக, தயாரிக்கும்போது அதில் சோடா உப்பு, பேக்கிங் பவுடர், மோனோசோடியம் குளுட்டமேட் போன்றவற்றைச் சேர்ப்பார்கள்.
இவை யாவும், சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால், இதயப் பிரச்னைகள், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் இள வயதிலேயே ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: சின்னவரை நம்பினார் கைவிடப்படார்- கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி
காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் : பிரியங்கா விடுவிப்பு – தமிழ்நாட்டுக்கு யார்?
Know the dangers of ready-to-cook foods