ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைன் நாட்டுக்கு அதிகளவில் பணம் செலவழித்ததாக கூறி, உக்ரைன் நாட்டின் அரிய கனிம வளங்களை கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் போட்ட ஒப்பந்தம் கானல் நீராகி விட்டது.
இதனால், இப்போது கனடாவுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக கனடா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகித வரியை விதித்துள்ளார். அப்படி இல்லையென்றால், அமெரிக்காவின் 51வது மாகாணமாகி விடுங்கள் என்று ட்ரம்ப் மறைமுக நெருக்கடி கொடுக்கிறார்.King charles silence about canada
பல தேவைகளுக்காக அமெரிக்கா கனடாவை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும்
கனடா நாள் ஒன்றுக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. அதே போல நாள் ஒன்றுக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதுமட்டுமல்ல மின்சாரத்துக்கு அமெரிக்கா கனடாவையே நம்பியுள்ளது. ஆண்டுக்கு கனடா சுமார் 53 டெராவாட் மின்சாரத்தை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அமெரிக்கா கனடாவை 51வது மாகாணாமாக்க வேண்டுமென்று டிரம்ப் கூறி வருகிறார். கனடாவும் அமெரிக்கா போன்று பரப்பளவில் மிகப்பெரிய நாடு. அவ்வளவு பெரிய நாட்டையை தங்கள் மாகாணமாக்க போவதாக கனடா பற்றி டிரம்ப் அசால்ட்டாக பேசி வருகிறார்.King charles silence about canada
ஆனால், கனடாவின் அரசியல் ரீதியாக ஜஸ்டின் ட்ரோடா பிரதமராக இருந்தாலும், கனடாவின் உண்மையான தலைவர் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டனில் எப்படி மன்னராக சார்லஸ் பதவியேற்றாரோ… அதே போலவே, கனடா சென்றும் மன்னர் சார்லஸ் பதவியேற்றுக் கொள்வது சம்பிரதாயம் ஆகும்.
கனடா காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது. அதோடு, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் உறுப்பினராக உள்ள Five Eyes intelligence கூட்டமைப்பிலுள்ள 5வது நாடு கனடா.
இந்த நிலையில், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணாமாக்குவேன் என்று சூளுரைத்து கொண்டிருக்கும் டிரம்ப்க்கு பிரிட்டன் மன்னர் எதிர்ப்பு தெரிவிக்காதது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் சார்லஸ் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பிரிட்டன் பிரதமர் மற்றும் கனடாவிலுள்ள பிரிட்டன் மன்னரின் பிரதிநிதியான ஆளுநர் மேரி சைமனும் அமைதி காப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.King charles silence about canada
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஸ்காட்லாந்துக்கு அரசு முறை பயணமாக வரும்படி பிரிட்டன் மன்னர் சார்லஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரில் சந்திக்கும் போது, கனடா பற்றி இருவரும் விவாதிக்கலாம் என தெரிகிறது.