இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா கோலாகலம்!

இந்தியா

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (மே 6) நடைபெறுகிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிறகு ராணியின் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் மன்னரானார். அவருக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

king charles coronation

1953-ஆம் ஆண்டு ராணி எலிசபெத்துக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. 70 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு இன்று முடிசூட்டு விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பார்க்கர் இருவரும் தங்க முலாம் பூசப்பட்ட சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

king charles coronation

கேன்டர்பரி ஆர்ச்பிஷப் சார்லசை மன்னராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிடுவார். இதனை தொடர்ந்து மன்னர் உறுதிமொழி எடுத்துக்கொள்வார். மன்னருக்கு செங்கோல் மற்றும் புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும்.

பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மன்னர் மற்றும் ராணி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என 2,000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்கிறார். மன்னர் முடிசூட்டு விழாவை முன்னிட்டு இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலமாக மாறியுள்ளது.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் பிரியாணி

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0