பொது மேடையில் துப்பாக்கியுடன் வந்த ஈரான் அதிபர்: காரணம் என்ன?

Published On:

| By Kumaresan M

இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் முதன் முறையாக பொது மேடையில் தோன்றிய ஈரான் அதிபர் அயதுல்லா கொமெனி  கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார்.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. ஈரான் நாட்டின்  தலைவர் அயதுல்லா அலி கொமெனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில்  கொமெனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

அப்போது பேசிய அவர், பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்துக்கு ஈரான் நாடு உறுதியாக ஆதரவளிக்கும்.  ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று அவர் சபதமெடுத்தார்.   இஸ்ரேல் மீதான தாக்குதல் சட்டப்பூர்வமானது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கொமெனி தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும்.  ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து  எதிரிகளை வீழ்த்தும் என்றும் கூறினார்.

கொமெனி மேலும் பேசுகையில், “கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடந்த தாக்குதல் சரியானது தான். பாலஸ்தீனியர்களுக்கு இதைச் செய்ய உரிமை இருக்கிறது. அதேபோல அந்த ஆக்கிரமிப்பு தேசத்தின் மீது நாங்கள் நடத்திய தாக்குதலிலும் எந்தவொரு தவறும் இல்லை.

இந்த நிகழ்ச்சியில் பேசிய போது, கொமெனி கையில் துப்பாக்கியுடன் மேடை ஏறினார். மேடையில் துப்பாக்கியை அவருக்கு முன்னால் வைத்து கொண்டு பேசினார்.

முன்னதாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட உடனே மிகுந்த பாதுகாப்பான இடத்துக்கு கொமேனி கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 சென்னையில் இந்திய விமானப்படை தின சாகச நிகழ்ச்சி… எப்படி பார்ப்பது ?

தமிழிசை குறித்து விமர்சனம்… வருத்தம் தெரிவித்த திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel