காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று (ஏப்ரல் 23) போலீசாரிடம் சரண் அடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு உருவாக்க ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் முன்னெடுப்பு எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அம்ரித் பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதனால் கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தை அமிர்த பால் சிங் முற்றுகையிட்டார். அப்போது ஆறு போலீசார் காயமடைந்தனர்.
இதனால் பிப்ரவரி 24ஆம் தேதி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் அவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர்.
இதனால் மாறுவேடத்தில் அம்ரித் பால் சிங் பஞ்சாப், டெல்லி, நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க நேபாள அரசு உஷார்ப்படுத்தப்பட்டது.
இந்த சூழலில் அம்பரித்பால் சிங்கின் கூட்டாளிகள் பலரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் சிறையில் அடைத்துள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் ஒரு மாதத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலம் திப்ருகர் அழைத்துச் சென்று போலீசார் விசாரிக்க உள்ளனர்.
பிரியா
காவல்துறையில் வரப்போகும் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு பயிற்சி!
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ டீசர்!