கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஷபியா என்ற பெண், தான் மத நம்பிக்கையற்ற முஸ்லிம் என்றும், எனவே முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு (ஷரியத் சட்டம்) பதிலாக தன்னை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொது சட்டத்தின் கீழ் நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Kerala Safiya wants no religion
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு 4 வாரத்துக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்ந்தது குறித்து ஷபியா கூறுகையில், “முஸ்லிம் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் தந்தை தனது மகளுக்கு தனது சொத்தில் 3 ல் ஒரு பங்குதான் கொடுக்க முடியும். ஆனால், எனது சகோதரருக்கு 3ல் 2 பங்கு சொத்து கொடுக்கப்படும். எனக்கு ஒரு மகள் உள்ளார். எனது சாவுக்கு பிறகு எனது சொத்துக்கள் முழுமையாக எனது மகளுக்கு செல்லாது. அவளின் தந்தையின் சகோதரர்களும் சொத்தில் பங்கு கேட்பார்கள்
இது வரை நான் இஸ்லாத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை . நான் இஸ்லாத்தின் மீது நம்பிக்கையற்றவள். எனது தந்தை முகமதுவும் இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஷரியத் சட்டத்தை பின்பற்ற விரும்பாத முஸ்லிம்களை நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் நடத்த வழி வகை செய்ய வேண்டும்.
ஷரியத் சட்டத்தின்படி, இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, பெற்றோரின் சொத்தில் எந்தவொரு உரிமையும் அவர்களுக்கு கிடையாது. ஷரியத் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமையை ஷரியத் சட்டம் பறிக்கிறது. எனக்கு இஸ்லாம் மதமும் வேண்டாம். ஜாதியும் வேண்டாம்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்னேஹா பார்த்திபராஜா ஜாதி மதமற்றவர் என தமிழ்நாடு அரசிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளார். கலப்பு திருமணம் செய்த தம்பதியருக்கு பிறந்த ஸ்னேஹாவின் கல்வி சான்றிதழ்களில் ஜாதி, மதம் என்ற பகுதி வெற்றிடமாக இடப்பட்டிருந்தது. இந்த நாட்டில் முஸ்லிமாக பிறந்தால் முஸ்லிம் தனிபர் சட்டத்தின்படிதான் நடத்த வேண்டுமா? எனது முழு சொத்தையும் நான் அப்படியே எனது மகளுக்கு கொடுக்க விரும்புகிறேன்.
எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரர் உண்டு. அவரையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இந்திய வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் எனது சொத்தை நான் பெற விரும்புகிறேன். ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் அல்ல. இந்திய வாரிசுரிமை சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும்” என்றார்.
தற்போது 51 வயதான ஷபியா விவகாரத்து பெற்றவர். இவருக்கு 25 வயதில் இஷா என்ற ஒரு மகள் இருக்கிறார். ஷபியா கேரளாவில் ex muslims என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். Kerala’s Safiya wants no religion