இரட்டையர்களின் காதல் வலை… சிக்கிய இளம்பெண்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்!

இந்தியா

கேரளாவில் வீடியோ காலில் இளம்பெண்ணை நிர்வாணமாக பதிவு செய்த இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்தவர்கள்  21  வயதான அசைனார் மற்றும்   உசேன்.  இரட்டையர்களான இவர்கள் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதில் போட்டி போட்டு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், அசைனாரின்  பார்வை அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீது விழுந்துள்ளது. இருவரும் காதலித்துள்ளனர்.

இதே இளம்பெண்ணுக்கு உசேனும் குறி வைத்தார். பார்க்க ஒரே மாதிரியும், ஒரே மாதிரியான நடத்தையும் இருந்ததால் உசேனுடனும் இளம்பெண் காதல் வலையில் சிக்கினார். இந்த பெண்ணுக்கு இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து தினமும் இரவில் மாறி மாறி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். அப்படித்தான் ஒருநாள் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்த அசைனார், அந்த பெண்ணிடம் நாம் தான் திருமணம் செய்யப்போகிறோமே, வீடியோ காலில் நிர்வாணமாக வாயேன் என்று கேட்டுள்ளார்.

காதல் மயக்கத்தில் இருந்த இளம்பெண் அசைனார் முன் வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். அசைனார்  அதனை பதிவு செய்த வைத்து கொண்டுள்ளார். பின்னர், இரட்டையர்கள் அந்த வீடியோவை காட்டி, அந்த பெண்ணை தங்கள் இச்சைக்கு இணங்க மிரட்டியுள்ளளனர். ஆனால், அந்த பெண் மறுத்ததால், நிர்வாண வீடியோவை சமூகவலைத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து எடக்கரை போலீசில் அந்தப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் இரட்டையர்களான அசைனாரையும், உசேனையும் நேற்று கைது செய்தனர்.

இருவரும் மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 நொடியில் 17 லட்சத்தை இழந்த பிக்பாஸ் சௌந்தர்யா… டிஜிட்டல் அரெஸ்ட் உஷார்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை அப்டேட்!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *