பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொர்ணூர் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தூய்மைப் பணி நடந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தொழிலாளர்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
பலியான தொழிலாளர்கள் சேலம் மாவட்டத்தைச் சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரது உடல் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரயில் விபத்தில் பலியான நான்கு பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ரயில் வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : விஜய் அவசர ஆலோசனை முதல் வெற்றியை நோக்கி இந்தியா வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்க கிளம்பிவிட்டீங்களா? ஒரு நிமிஷம்!
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள் : மோடிக்கு கார்கே பதிலடி!
பியூட்டி டிப்ஸ்: பொடுகுத் தொல்லையைப் போக்க… இதோ ஒரு சூப்பர் ஹேர் பேக்!