அதிக ரிஸ்க்குள்ள கேரளாவில் அணு உலைகளா? கிளம்பிய எதிர்ப்பு!

இந்தியா

நிலச்சரிவு, பெரும் மழை பெய்யும் கேரளாவில் புதியதாக இரு அணு உலைகளை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் அவ்வப்போது நிலச்சரிவு, பெருமழை பெய்யும். கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த பெரு மழையில் அந்த மாநிலமே சிதைந்து போனது. இத்தகைய நிலையில், அங்கு திருச்சூர் அல்லது  காசர்கோடு மாவட்டத்தில்  அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கேரள மின்வாரியத்துறையுடன் இந்திய அணு உலை நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

220 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யும் வகையில் இரு உலைகள் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது . அதிக ரிஸ்க் உள்ள கேரளா போன்ற இடங்களில் அணு உலை அமைக்க கூடாது என்றும் நிபுணர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். கேரள மாநில பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவரான டாக்டர். ஓமணன், “கேரளத்தில் அணு உலை அமைப்பது ரிஸ்க் நிறைந்தது. அதற்கு  பதிலாக தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் பேசி கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலை அமைப்பதே நல்லது. தமிழகத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டு கேரளாவுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யலாம்” என்கிறார்.

தென்னிந்தியாவில் இரு அணு உலைகள் மட்டுமே உள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கம் மற்றும் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் தினமும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இன்னும் 4 உலைகள் அங்கு அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. பணிகள் முற்றிலும் முடிவடைந்தால்,  தினமும் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் .  ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வரும் கூடங் குளம் அணுமின் நிலையங்களின் கட்டுமானப்பணி 2027 ஆம் ஆண்டு முற்றிலும் நிறைவடைந்து விடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“திமுக பவள விழாவை கூட்டணியுடன் கொண்டாடுவோம்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!

பரிதாபங்கள் சேனலில் திருப்பதி லட்டு வீடியோ… வருத்தம் தெரிவித்த கோபி, சுதாகர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *