கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற லாட்டரி சீட்டுகள் விற்பனை முடிவுகள் நேற்று (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.25 கோடியை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வென்றுள்ளார்.
கேரளாவில் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு தரப்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு ஓணப்பண்டிகைக்காக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்றது.
66.5 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனை ஆகியது. ஒரு சீட்டின் விலை ரூ.500-க்கு விற்கப்பட்டது. இதன்மூலம் கேரள அரசுக்கு ரூ. 270 கோடி வருவாய் கிடைத்தது.
கடந்த ஆண்டு லாட்டரி சீட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. விற்பனையான லாட்டரி சீட்டுகளின் பரிசு செப்டம்பர் 18 அன்று அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் TJ 750605 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ. 25 கோடி விழுந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் அனூப் (30) வாங்கியுள்ளார் . TG 270912 என்ற எண்ணுக்கு இரண்டாம் பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை பாப்பன் என்பவர் பெற்றுள்ளார்.
அடுத்து 10 நபர்களுக்கு மூன்றாவது பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. அந்த எண்கள் TA 292922, TB 479040, TC 204579, TD 545669, TE 115479, TG 571986, TH 562506, TJ 384189, TK 395507,TL 555868 ஆகும்.
4 ஆவது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் 90 நபர்களுக்கு வழங்கப்படும். 72 ஆயிரம் பேருக்கு 5 ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
கடந்தாண்டு 65 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தது. தற்போது அது 66.5 லட்சமாக அதிகரித்துள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
மோனிஷா
மீண்டும் ஹீரோவாக… பான் இந்தியா படத்தில் ராமராஜன்
மகளிர் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?