ஜெயிச்சது 25 கோடி- கிடைச்சது 12 கோடி: வரியால் பறிபோன பம்பர் பரிசு!
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற லாட்டரி விற்பனையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25 கோடி பம்பர் பரிசு அடித்த நிகழ்வு, கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் பேசுபொருளானது.
இந்தநிலையில், அந்த நபர் ரூ.25 கோடி பரிசு வாங்கினாலும், அவருக்கு கிடைக்கப்போவது என்னவோ ரூ.12 கோடி மட்டும் தான்.
லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஏஜெண்டுக்கு பரிசு தொகையில் 10 சதவிகிதம் வழங்க வேண்டும். அதன்படி, ரூ.2.5 கோடி ஏஜெண்டுக்கு வழங்கப்படும்.
மொத்த பரிசுத் தொகையில் 30 சதவிகிதம், ரூ.6.75 கோடி அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
இந்த பிடித்தங்கள் போக ரூ.15.75 கோடி மட்டுமே வெற்றி பெற்ற நபரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
5 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் 37 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
எனவே 6.5 கோடி வருமான வரியில் ரூ.2,49,75,000 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். கடைசியாக, வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணமாக, சுகாதாரம் மற்றும் கல்விக்கு செஸ் வரி 4 சதவிகிதம் ரூ.36,99,000 வசூலிக்கப்படும்.
எனவே, ஆட்டோ ஓட்டுநர் அனூப், ரூ.25 கோடி லாட்டரி பரிசுத் தொகை பெற்ற போதிலும், ரூ.12,11,74,000 வரி பிடித்தம் போக, அவருக்கு ரூ.12,88,26,000 கோடி மட்டுமே கிடைக்கும்.
1967-ஆம் ஆண்டு முதல் கேரள அரசு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு மட்டும் 66.5 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு 54 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு லாட்டரி டிக்கெட்டுகளும் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு எப்போது?
பத்திரப்பதிவு : அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!