ஆற்றில் ஆடிய நெய்மர், மெஸ்ஸி: கேரளாவில் நடந்த விநோதம்!

இந்தியா

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு சில வாரங்களில் கத்தார் நாட்டில் மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட் அவுட் வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்துள்ளனர்.

அதன் மூலம் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். அதை அவர்களுடைய இணைய பக்கங்களிலும் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட் அவுட்டை அமைத்துள்ளனர்.

இந்த கட் அவுட்டை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்தப் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இதுபோல கட் அவுட் அமைக்க முடிவு செய்து அதன்படி நேற்று ( நவம்பர் 3 ) பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கும் அவரது ரசிகர்கள் அதே செருபுழா ஆற்றில் கட் அவுட் அமைத்துள்ளனர்.

இந்த கட் அவுட் மெஸ்சியின் கட் அவுட்டை விட 10 அடி உயரமாக 40 அடியில் நிறுவப்பட்டுள்ளது. கால்பந்து ரசிகர்கள் போட்டி போட்டிக்கொண்டு இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0