வெயிலின் தாக்கம்: நீதிமன்றத்தில் வெள்ளை நிற ஆடை அணிய அனுமதி!

Published On:

| By Selvam

கேரள மாநிலத்தில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கறுப்பு நிற கோட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பாலக்காடு, புனலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

மேலும், கோடைக்காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் அம்மை உள்ளிட்ட கோடைக்கால நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களில் 900 பேருக்கு மேல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 90 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், கோடை வெயிலின் காரணமாக நீதிமன்றங்களில் கறுப்பு கோட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து. நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கறுப்பு நிற கோட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம் என்று கூறியுள்ளனர். இந்தச் சலுகை அடுத்த மே மாதம் 31-ம் தேதி வரை வக்கீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கு ஏற்றதா ஐஸ் வாட்டர் ஃபேஷியல்?

கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

சல்லிசல்லியா நொறுக்கிட்டாங்க… மும்பையிடம் மொத்தமாக சரணடைந்த பெங்களூரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel