கேரளாவில் சோகம்: காருக்குள் உயிரை விட்ட கணவன் மனைவி!

இந்தியா

கேரளா கண்ணூர் மாவட்டம் அருகே கார் தீ பற்றி எரிந்து உள்ளே இருந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் அருகே பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு நேற்று காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

காரின் முன்பகுதியில் கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். காரை பெண்ணின் கணவர் ஓட்டிச் சென்றார். காரின் பின்பகுதியில் அவர்களின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், கார் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென காருக்குள் புகை எழும்பி தீ பற்றியது. தீ பரவுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் காரை உடனடியாக நிறுத்தினர்.

காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால், கணவன் மற்றும் மனைவி என இருவரும் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரிஜித் (35 ) மற்றும் அவரது மனைவி ரீஷா (26 ) என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் கேரளா கண்ணூர் அருகாமை குட்டியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைத்து பிரிஜித் மற்றும் ரீஷாவினை காரிலிருந்து மீட்டனர்.

இருப்பினும், கணவன் மற்றும் மனைவி என இருவருமே ஏற்கனவே இறந்து விட்டனர். 

kerala couple who died in car

காரில் மொத்தம் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர். குழந்தை மற்றும் 3 பேர் காரின் பின்னால் அமர்ந்து வந்துள்ளனர். பிரிஜித் மற்றும் ரீஷா முன்னாள் அமர்ந்துள்ளனர்.

காரில் தீப்பற்றியவுடன் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் காரிலிருந்து இறங்கி தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காயங்கள் ஏதும் இல்லை.

இவர்கள் அனைவரும் பயணம் செய்த கார் 2020 ஆம் ஆண்டு மாடல் மாருதி எஸ் பிரஸ்ஸோ எனத் தெரிகிறது. காரில் தீப்பற்றியதால் முன்னால் இருந்த காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடியவில்லை.

இதனால், கணவன் மற்றும் மனைவி என இருவரும் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டப் பகுதியில் உள்ள மக்கள் எந்த நேரத்திலும் காரின் ஆயில் டேங்க் வெடிக்கும் அபாயம் இருந்ததால் காருக்கு அருகில் சென்று காப்பாற்றும் முயற்சியில் பெரிதாக ஈடுபடவில்லை .

காரில் திடீரென தீப்பற்ற காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்ணூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை? : காவல்துறை எச்சரிக்கை!

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை ஆடிய ’காம் கேம்’- எடப்பாடிக்கு என்ன சின்னம்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published.