Kerala blast Police examining the CCTV footage

கேரள குண்டுவெடிப்பு: உடனே வெளியேறிய கார்… சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீஸ்!

இந்தியா

களமசேரியில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளின் பாகங்களை விசாரணைக் குழுவினர் கைப்பற்றியிருப்பதாக கேரளா போலீசார் கூறுகின்றனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களமசேரி பகுதியில் சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜெகோவா என்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் மாநாடு கூட்டம் இன்று (அக்டோபர் 29) காலை நடைபெற்றது.

இந்த மாநாட்டின் பிரார்த்தனை கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, மூன்று முறை ஐஇடி குண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஒரு பெண் அங்கேயே உயிரிழந்த நிலையில் 45 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உயிரிழந்த பெண்ணின் விவரம் இதுவரை தெரியவரவில்லை.

விசாரணைக்காக என்.ஐ.ஏ.வும், தேசிய பாதுகாப்பு படையும் கேரளா விரைகிறது.

அதேசமயம், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பு நடந்த உடனேயே நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை விட்டு நீல நிற மாருதி கார் ஒன்று வெளியேறியிருக்கிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்டின், குண்டுவெடிப்புக்குப் பின்னால் இருப்பதாகக் கூறி, திருச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக  கேரளா போலீஸ் கூறுகிறது. டொமினிக் மார்டின் சாம்ரா சர்வதேச சபையில் உறுப்பினராக இருப்பதாக கூறியிருப்பதாகவும், அதனால் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழலில் நாளை காலை 10 மணிக்கு அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் எச்சரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

லியோ vs 2.0 : வசூலில் எது டாப்?

கார்த்தி 25: இயக்குநர் அமீர் பங்கேற்காதது ஏன்? ரசிகர்கள் கேள்வி!

கேரளா குண்டுவெடிப்பு: டெல்லியில் இருந்து பினராயி விஜயன் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *