நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பு, ஆக்சிஜன் கருவிகளை பராமரித்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்த பரவிய கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தியது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியாவில் ஏராளமானவர்கள் ஆக்ஜிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேரிட்டது.
இந்தநிலைில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது.
நேற்று(டிசம்பர் 23) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் மனோகர் அக்ஞானி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் “இப்போதைக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. ஆனால் வரும் நாட்களில் அதிகரித்தால் போதிய நடவடிக்கை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
தினசரி ஆக்சிஜன் தேவை மற்றும் பயன்பாடு குறித்து கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் தொடர்பான பிரச்சனைகளை உடனக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளுக்கும் திரவ ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும்.
கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை.ரா
ஐபிஎல் ஏலம்: கதறி அழுத ஹாரி புரூக் குடும்பம்!
பேராசிரியர் சிலை கண்ணாடியை சரி செய்த முதல்வர்!