உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் குளிர்காலத்தில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கேதார்நாத் கோயில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருவதால் கோயிலின் கதவுகள் அடைக்கப்பட்டன.
இந்த ஆண்டு கேதார்நாத் ஆலயத்தின் கதவுகள் ஏப்ரல் 25 அன்று சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கேதார்நாத் கோயில் நடை மூடப்படும் தேதி நிர்ணயிக்கப்பட்டு தற்போது கேதார்நாத் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். மேலும் கேதார்நாத் கோயிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாகவும் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார்.
கோயிலின் நடை சாத்தப்பட்ட பிறகு கேதார்நாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும் என்பது சிறப்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட் பர்ஃபைட்!
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
கவுண்டவுன் தொடங்கி விட்டது: கணவரை அறிமுகம் செய்த கார்த்திகா
பாஜக இல்லாமல் வெற்றி பெற முடியாதா?: ஓபிஎஸுக்கு கே.பி.முனுசாமி பதில்!