நல்ல நேரம் பார்த்து தேசிய கட்சி தொடங்கிய கேசிஆர்

இந்தியா

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அதாவது தெலங்கானா மாநில சபை என பொருள்படும் மாநிலக் கட்சியை இதுவரை நடத்தி வந்த தெலங்கானா  மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இன்று (அக்டோபர் 5) விஜயதசமி நாளில்  பாரத ராஷ்டிர சமிதி அதாவது பாரத தேசிய கட்சி என்ற பெயரில் தேசியக் கட்சியைத்  தொடங்குகிறார்.

கட்சி தொடங்குவதற்காக  நல்ல நாள் பார்த்து இன்று பிற்பகல் 1.19க்கு நல்ல நேரம் என ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்ததன் அடிப்படையில் அக்டோபர் 5 பிற்பகல் 1.19க்கு தனது புதிய தேசிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் கேசிஆர்.

ஹைதராபாத்தில் இன்று நடந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், தங்களது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி உள்ளிட்ட,

பல மாநில கட்சிகளின் தலைவர்களும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட இந்தியா முழுதுமுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களில் சிலர் தங்கள் அமைப்பை தெலங்கானா தேசிய கட்சியோடு இணைக்கிறார்கள். 

இதன் மூலம் 21 ஆண்டுகாலம் மாநில கட்சியாக இருந்த  டிஆர்எஸ் தேசிய கட்சியாக மாறுகிறது.

டிஆர்எஸ் தலைவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குப் பின்  தேசியக் கட்சியாகப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டிஆர்எஸ் கொடி மற்றும் கார் சின்னத்தின் இளஞ்சிவப்பு நிறத்தை பிஆர்எஸ் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் டிஆர்எஸ் கொடியில் உள்ள தெலுங்கானா வரைபடம் பிஆர்எஸ் கொடியில் இந்திய வரைபடத்துடன் மாற்றப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். 

வேந்தன்

நிதிஷ்-கே.சி.ஆர். சந்திப்பு: தேசிய அரசியலில் திருப்பம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.