காசி தமிழ் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாச்சார தொடர்பை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் ‘காசி தமிழ் சங்கமம்’ விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்க உள்ள இவ்விழாவை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று (நவம்பர் 19) தொடங்கி வைத்து, தமிழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
காசி தமிழ்ச் சங்கம தொடக்க விழா வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று மதியம் விமானம் மூலம் காசிக்கு வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்து இறங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, காசி – தமிழ் சங்கமம் தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார். அந்த குறும்படம் தமிழ்நாட்டின் சிறப்புகளான இசை, நடனம், கோவில்கள், உணவு என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இன்றைய தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சர் எல்.முருகன், இசைஞானி இளையராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய, கலாச்சார ஆய்வாளர்கள், கைவினைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில்முனைவோர்கள்,
மற்றும் தொழில் வல்லுநர்கள் என 12 பிரிவுகளின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர் வாரணாசிக்கு 8 நாள் சுற்றுப்பயணமாகச் செல்ல இருக்கின்றனர்.
இதற்காகத் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
மோனிஷா
ராஜீவ் கொலை: மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?
தெலங்கானா குதிரை பேரம்: சிக்குகிறாரா பாஜக தேசிய பொதுச்செயலாளர்?