வயநாட்டு மக்களுக்காக 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்த நிலையில், கர்நாடக அரசும் 100 வீடுகள் கட்டித் தருகிறோம் என்று உதவிக்கரம் நீட்டியுள்ளது.
வயநாட்டைப் பொறுத்தவரை, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் அதிக சேதங்களைச் சந்தித்துள்ளன. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 24 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் வயநாட்டுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களுக்காக 100 வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தார்.
தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஆதரவாக கர்நாடகா துணை நிற்கிறது. நாம் ஒன்றாக இணைந்து மீண்டெழுவோம்; நம்பிக்கையை மீட்டெடுப்போம்” என்று வயநாடு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
சித்தராமையாவின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “வயநாட்டின் இந்த இக்கட்டான நேரத்தில் தாராளமாக உதவிக்கரம் நீட்டிய கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும்தான் வயநாட்டுக்கு இப்போது தேவைப்படும் பலம்” என்று கூறியுள்ளார்.
வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு : துரைமுருகன் குற்றச்சாட்டு!
ஹெல்மெட்டுக்கு நோ… இர்ஃபானுக்கு செக் வைத்த போலீஸ்!