60 Percent Kannada Language in Nameplates

பெயர்ப்பலகைகளில் 60% கன்னட மொழி கட்டாயம்: மசோதா நிறைவேற்றம்!

இந்தியா

பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சில நாட்களுக்கு முன் போராட்டம் நடந்த நிலையில்,  கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவிகிதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஆங்கில பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 60 Percent Kannada Language in Nameplates

இதை கண்டித்தும், பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது. அப்போது சில வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சி, தலைநகரில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெயர்ப்பலகைகளில் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவிகிதம் கன்னடம் இடம்பெறச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

கர்நாடக அமைச்சரவையிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. இதை முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று ஒப்புதலுடன் அனுப்புங்கள் எனக் கூறி அம்மாநில ஆளுநர் ஜனவரி 30-ம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, தற்போது நடந்து வரும் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா முதன்முதலாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது .

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 20) சட்ட மேலவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் தர உள்ளார்.

இதனால் கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் அனைத்திலும் 60 சதவிகிதம் கன்னட எழுத்துகள் கட்டாயம் என்ற சட்டம் விரைவில் அமல்படுத்தபட உள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: மாசுமருவற்ற சருமத்துக்கு உதவும் மரிக்கொழுந்து!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தால்ச்சா

சண்டிகர்… சாபமா? சாம்பிளா? அப்டேட் குமாரு

60 Percent Kannada Language in Nameplates

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *