கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகநாடுகளை ஆட்டம் காணவைத்தது.
பின்னர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் உலகத்தை சீனாவில் புதிதாக மீண்டும் பரவும் கொரோனா (பி.எப்.7) கதிகலங்க வைத்துள்ளது.
இந்த தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இதேபோன்ற கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற கேள்வி புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ள தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
-ராஜ்
மாணவி தாலி வழக்கு: விசாரணை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம்!