கர்நாடகத்தில் சாலை விபத்தில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஸ் பர்தான். இவர், கர்நாடக மாநில கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கடந்த 2023 ஆம் ஆண்டுதான் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், மைசூருவிலுள்ள கர்நாடக மாநில போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்து விட்டு, டிசம்பர் 1 ஆம் தேதி ஹசனிலுள்ள டி.எஸ்.பியாக பொறுப்பேற்க போலீஸ காரில் சென்று கொண்டிருந்தார். காரை மஞ்சே கவுடா என்பவர் ஓட்டியுள்ளார்.
மைசூரு ஹாசன் தேசிய நெடுஞ்சாலையில் ஹசனை நெருங்க 10 கி.மீ தொலைவு இருந்த போது, கிட்னா என்ற கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் டயர் வெடித்துள்ளது . இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில், கார் நொறுங்கி போனது.
இந்த விபத்தில் படுகாயமடந்த ஹர்ஸ் பர்தானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து போனார். டிரைவர் மஞ்சே கவுடா காயங்களுடன் ஹசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் மரணமடைந்த 26 வயதே நிரம்பிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தந்தை அகிலேஷ் மத்திய பிரதேசத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
மகன் இறந்த தகவல் அறிந்து அவரின் குடும்பத்தினர் துடித்து போனார்கள். ஹர்ஸ் பர்தானின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இளம் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தான் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.
ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்கச் செல்லும் வழியில் இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பல வருட கடின உழைப்பு பலன் தரும் போது இப்படி நடந்திருக்க கூடாது.
ஹர்ஷபர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விலங்குகள் போல பெண்களை… விஜய் சேதுபதி மீது ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்!
ஒரே நாளில் 51 செ.மீ மழை… நிரம்பிய வீடூர் அணை… தனித்தீவான மயிலம்