kantara recreation in Ganesh Visarjan makes injury

“காந்தாரா” பட பாடலால் ஏற்பட்ட தீ விபத்து..! சிறுவர்கள் படுகாயம்!

இந்தியா

கடந்த ஆண்டு வெளியாகி இந்தியா முழுக்க மிகப்பெரிய மெகா ஹிட் அடித்த கன்னட திரைப்படம் ’காந்தாரா’. வெறும் 16 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தின் இறுதி காட்சிகளில் கதாநாயகன் பஞ்சூர்லி தெய்வம் போன்று வேடம் அணிந்து நடனமாடும் காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதெல்லாம் அந்தப் பாடலும், பஞ்சூர்லி நடனமும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

அப்படிப்பட்ட பிரபல காந்தாரா பட பாடல் காட்சியைப் போல் நடனமாட முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலுள்ள எர்ரகுண்டலா பகுதியில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் காந்தாரா பட காட்சியைப் போல பஞ்சூர்லி வேடத்தில் இரு கலைஞர்கள் நிற்க, அவர்களை சுற்றிலும் தீ வைத்து நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தீயில் விழுந்த போது நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தீ பற்றிக் கொண்டது. இந்த தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தீக்காயம் அடைந்தனர்.

இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தீ விபத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அயலான் டீசர் அப்டேட்: ஏலியன் பொங்கலுக்கு ரெடியா?

போக்குவரத்து துறையில் தனியார்மயமா? – எடப்பாடி காட்டம்!

+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *