முந்தியபோது சாலை விபத்து: காலை இழந்த இளம் நடிகர்!

இந்தியா

டிராக்டரை முந்த முயன்று எதிரே வந்த டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனத்தில் சென்ற கன்னட நடிகர் சூரஜ் குமார் மோதியதில் கடும் சேதமடைந்த அவரது வலது கால் அகற்றப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் சூரஜ் குமார். துருவன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ ஸ்ரீனிவாசின் மகன் ஆவார்.

சூரஜ்குமார் முன்னதாக ஐராவதம் மற்றும் தாரக் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து அனுப் ஆண்டனி என்ற பிரபல கன்னட இயக்குநரின் ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.

ஆனால் அந்த படத்தின் பணிகள் இதுவரை தொடங்கப்படாத நிலையில், மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியருடன் ‘ரத்தம்’ என்ற ஒரு படத்தில் சூரஜ் நடிக்க தயாராகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஊட்டியில் இருந்து கர்நாடகாவில் உள்ள சமரஞ்ச நகர் பகுதியில் உள்ள குந்தல்பேட் தாலுக்கா வழியே பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது முன்சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, சூரஜ் குமாரின் பைக் எதிரே வந்த டிப்பர் லாரி மீது அதிவேகத்தில் மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மைசூரில் உள்ள மணிபால் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் பலத்த சேதமடைந்த நிலையில் சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்ற அவரது வலது காலின் முழங்காலுக்குக் கீழே மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சூரஜ் குமார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இவருக்கு இப்படியொரு விபத்து நேர்ந்துள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரஜிற்கு அடிப்பட்ட செய்தி கேட்டு கன்னட சூப்பர் ஸ்டாரும், உறவினருமான சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் மருத்துவ மனைக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விபத்துக்கு காரணமாக இருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் மீது பெகூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

குழந்தைகளுடன் ஆபத்தான பயணம்: தந்தை கைது!

“சமூக நீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள்”-முதல்வர்!

செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத் துறையிடம் ஆதாரம் கேட்கும் என். ஆர். இளங்கோ

kannada actor lost his leg
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *