‘இமாச்சல் செல்வதை தவிர்க்கவும்’ : கங்கனா

இந்தியா சினிமா

சினிமா, அரசியல் என விவாதத்தை ஏற்படுத்தகூடிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் உள்ளவர் நடிகை கங்கணா ரணாவத். முதல் முறையாக பொது நலன் சார்ந்து விமர்சனம் இல்லாத பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நடிகை கங்கணா ரணாவத்.

வட இந்திய மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் சில நாட்களாக கடுமையான மழை காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கால் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமான போக்குவரத்து பாதைகள், சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கு இப்போது செல்ல வேண்டாம் என்று நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை வைத்துள்ளார்.

கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘‘இமாச்சலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வரும் நாட்களில் நிலச்சரிவுகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்வதைத் தவிர்க்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு!

சட்டம் ஒழுங்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *