கடந்த 1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த 248 ஆண்டுகளில் இதுவரை அமெரிக்காவில் பெண் ஒருவர் அந்த நாட்டின் அதிபர் ஆனதில்லை. உலகில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றவர் இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு இலங்கை அதிபரானார்.
உலகையே கட்டி ஆண்ட பிரிட்டனில் கூட மார்க்கரேட் தாட்சர் 1979 முதல் 1990 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளார். இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கூட பெனாசிர் பூட்டோ பிரதமராக ஆகியுள்ளார். ஆனால், பெண்ணுரிமை பேசும் அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை கூட வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னதாக பல பெண்கள் போட்டியிட்டாலும், டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஹிலாரி கிளின்டன் போட்டியிட்ட போது பாபரப்பு தொற்றி கொண்டது. இவர், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
தற்போது, கமலா ஹாரீஸ் மீண்டும் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார். அமெரிக்காவில் பெண்களை இரண்டாம் தரமாக பார்ப்பதும் , திறமையற்றவர்களாக பார்க்கும் கண்ணோட்டமும்தான் பெண்களால் அந்த நாட்டு அதிபராக முடிவதில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். தாயார் கமலா கோபாலன் சென்னையை சேர்ந்தவர்.தந்தை ஹாரிஸ் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். கமலா ஹாரீசின் சித்தி சாரா கோபாலன் இப்போதும் சென்னையில்தான் வசிக்கிறார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் கமலா ஹாரிஸ் பேசுகையில், அமெரிக்கா முதன்முறையாக பெண் அதிபரை தேர்வு செய்ய தயாராகி விட்டது என்று உரக்க கூறியுள்ளார். எப்போதுமே தன்னை பற்றி சிந்திக்கும் டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறையால் அமெரிக்க மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்றும் கமலா ஹாரிஸ் தாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரூ.59,000 நெருங்கிய தங்கம் விலை… அதிர்ச்சியில் மக்கள்!
தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைக்க ஏல அறிவிப்பு வெளியானது!