அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் நித்யானந்தாவின் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு கைலாசாவின் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி கைலாசாவில், தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின்,
பரஸ்பர முயற்சிகளை எதிர்கொள்வதற்கான பரஸ்பர முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிச் செல்ல உதவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று (ஜனவரி 12) வெளியான செய்திக் குறிப்பில், “இந்த ஒப்பந்தமானது, உலக அமைதிக்கான ஒரு சிறந்த பார்வைக்கான பரந்த இருதரப்பு நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுப்பதற்காக,
கைலாசா ஐக்கிய மாகாணங்களுக்கும், நெவார்க் நகரத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய தொடக்கத்தை இன்று குறிக்கிறது.
இந்த நெறிமுறை இருதரப்பு உறவுகளுடன் கைலாசா தனது மனிதாபிமான சேவைகளை நெவார்க் நகரத்திற்குக் கொண்டு வந்து அதன் சமூகத்திற்குச் சேவை செய்ய எதிர்பார்த்துள்ளது.
கைலாசா ஐக்கிய மாகாணங்கள் அதன் சொந்த இறையாண்மை நிலப்பரப்புடன் பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசத்தின் மறுமலர்ச்சியாகும்.
உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் இந்து புலம்பெயர்ந்தோருக்கு இது முதல் இறையாண்மை தேசமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தோனேசியா உடனும் ஐக்கிய கைலாசா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவின் நெவார்க் நகரத்தோடு கைலாசா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறித்து நித்யானந்தாவின் முகநூல் பக்கத்தில் புகைப்படங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மோனிஷா
ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் கைது!
மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு!