காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இணைந்து செயல்பட வாருங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே கனடாவில் வசித்து வந்த இந்தியா வம்சாவளியும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உண்டு என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியத் தூதரக உயர் அதிகாரியை கனடாவை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தியா உத்தரவிட்டது.
இதனிடையே சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் தீவிரவாதி ஒரிரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் கனடாவில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.
தொடர்ந்து கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.
இந்நிலையில் கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர்,
“கனடா மண்ணில் கனேடியரை கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புவதற்கு நம்பகமான காரணங்கள் உள்ளன.
எங்களிடம் சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் வலுவான நீதி செயல்முறைகள் உள்ளன. சட்டம் தன் கடமையை செய்யும்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என இந்தியாவை அழைக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
புதர் மண்டி கிடக்கும் பூண்டி நீர்த்தேக்க பூங்கா: புனரமைக்கப்படுமா?
சென்னை: விநாயகர் சிலைகள் ஊர்வல வழித்தடங்களும் கரைக்கும் இடங்களும்!
பாத்தியா, அதான்டா எங்க ஜியோட கெத்து..,