உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றனர்.
உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இந்த நிலையில் நீதிபதி அனிருதா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வு பெற்றனர்.
இதனையடுத்து 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது. அதனை மத்திய அரசு ஏற்றது.
இந்நிலையில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று புதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு நீதிபதிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் பதவியேற்றதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காந்திபாபுவின் கம்பி கட்டும் கதை: ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்திய ‘சதுரங்க வேட்டை’!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: அதிமுகவில் இருந்து மலர்க்கொடி சேகர் நீக்கம்!