ஆந்திராவில் 180 மில்லி மது பாட்டிலை 99 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், எந்த பிராண்டாக இருந்தாலும் 180 மி.லி மதுவை 99 ரூபாய்க்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கான டெண்டர் லாட்டரி முறையில் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மதுபான கடைகளுக்கான உரிமை கோருபவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், உரிமக் கட்டணமாக 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் .
இந்தக் கடைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். மாநிலத்திலுள்ள மொத்த மதுபானக் கடைகளில் குறைந்தது 10 சதவிகித கடைகள் கள் இறக்குபவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆந்திராவில் மொத்தம் 3,736 கடைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த மது பானமாக இருந்தாலும் தள்ளுபடியில் விற்கப்படும். இந்த முடிவால் ஆந்திர அரசுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதே வேளையில், இப்படி அடிமாட்டு விலையில் மதுவை விற்றால் ஆண்கள் குடித்து விட்டு ஆட்டம் போடுவார்கள். குடும்ப பிரச்னை எழ வழி ஏற்படும். உடல் நலமற்ற சமுதாயத்தை அரசே உருவாக்குவதாக பலரும் ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!
“மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிகவினரின் ஆதரவே இல்லை”: தமிழிசை சௌந்தரராஜன்
Comments are closed.